காலை 8 மணிக்கே ரஜினியுடன் சேர்ந்து சரக்கடித்து ராதாரவி.. வீட்டுக்கு வரவழைத்து அவமானப்படுத்திய சம்பவம்
தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் ராதாரவி. இவர் அண்மையில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் குறித்து பேசியிருந்தார்.
ராதாரவி - ரஜினி
இதில், அருணாச்சலம் படத்தில் முதன் முதலில் ராதாரவி தான் வில்லனாக நடிப்பதாக இருந்தாராம். அப்போது அருணாச்சலம் படத்தை பி. வாசு தான் இயக்குவதாக இருந்ததாம். அப்போது திடீரென ரஜினியிடம் இருந்து ராதாரவிக்கு போன் கால் வந்துள்ளது.
ரஜினியின் வீட்டிற்கு காலை 8 மணிக்கு ராதாரவி சென்றாராம். வீட்டிற்கு சென்று ரஜினியை சந்தித்ததுபின் இருவரும் சரக்கடிக்க துவங்கியுள்ளனர். இருவரும் குடித்துக்கொண்டிருக்கும் பொழுது அருணாச்சலம் படத்தின் ஸ்கிரிப்ட்டை ராதாரவிக்கு ரஜினி எடுத்து காட்டியுள்ளார்.
ஏற்பட்ட அவமானம்
அதன்பின், அருணாச்சலம் படத்தை பி.வாசுவிற்கு பதிலாக சுந்தர்.சி இயக்குகிறார். அதே போல் இப்படத்தில் மூன்று வில்லன்கள் நடிக்கிறார்கள். அதனால் ராதாரவி இதை செய்தால் நன்றாக இருக்குமா என்று தெரியவில்லை என ரஜினிகாந்த் கூறியுள்ளாராம்.
இப்படி தன்னை கூப்பிட்டு வைத்து சொல்கிறாரே ரஜினி என வருத்தப்பட்டாராம் ராதாரவி. சினிமாவின் தலையெழுத்தே என்னை போன்ற திறமை, உங்களை போன்ற அதிர்ஷ்டத்தை தேடி வருவதாக இருக்கிறது என ரஜினியை பார்த்து கூறினாராம் ராதாரவி.
ஒரு நடிகனாக தனக்கு நடந்த அவமானத்தை அண்மையில் ராதாரவி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அடேங்கப்பா... இத்தகை கோடி வங்கி கடனா...? அதானி குழுமம் வங்கிய வங்கி கடன்கள் வெளியீடு....! IBC Tamilnadu

படவாய்ப்புக்காக அந்த நபர் என்னை படுக்கைக்கு அழைத்தார்.. - மனம் திறந்த நயன்தாரா... - ஷாக்கான ரசிகர்கள்..! IBC Tamilnadu
