பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 வசூல் வேட்டை.. முன்பதிவில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த்

By Karthick Raja Oct 06, 2026 06:30 AM GMT
Report

Jailer 2 Pre-booking: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாங்க.

ஜெயிலர் 2

கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஆன திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்க, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 எப்போது என்கிற கேள்வி ரசிகர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டது.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 வசூல் வேட்டை.. முன்பதிவில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த் | Rajinikanth Jailer 2 Pre Booking

10 முதல் 15 முறையாவது 'I Love You' சொல்ல சொல்லி.. ராஷ்மிகாவின் அன்பு குறித்து மனம் திறந்து பேசிய விஜய்

10 முதல் 15 முறையாவது 'I Love You' சொல்ல சொல்லி.. ராஷ்மிகாவின் அன்பு குறித்து மனம் திறந்து பேசிய விஜய்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாம் பாகமாக ஜெயிலர் 2 இருந்த நிலையில், கடந்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வெளியானது. இதன்பின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று, இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் முடிந்து, தற்போது அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 வசூல் வேட்டை.. முன்பதிவில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த் | Rajinikanth Jailer 2 Pre Booking

பாக்ஸ் ஆபிஸ்: ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல்

சமீபத்தில் இப்படத்திலிருந்து அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அனிருத்தின் இசை மேஜிக் கண்டிப்பாக ஜெயிலர் 2 படத்திலும் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 வசூல் வேட்டை.. முன்பதிவில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த் | Rajinikanth Jailer 2 Pre Booking

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் பத்தா திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் பத்தா திரைப்படம் செய்துள்ள வசூல்

இதனை தொடர்ந்து நேற்று மாலை ஜெயிலர் 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. மிரட்டலான காட்சிகள், வசனங்கள், கதாபாத்திரங்களை காட்டிய விதம், ரஜினியின் மாஸ் என டிரைலர் வேற லெவலில் இருந்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முன்பதிவு வசூல்

முன்பதிவு வசூல் டாப் நடிகர்களின் படங்கள் என்றாலே கண்டிப்பாக முன்பதிவு வசூலில் மாபெரும் சாதனை படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வகையில், ரிலீஸிற்கு இன்னும் 9 நாட்கள் இருக்கும் நிலையில், இதுவரை நடைபெற்ற முன்பதிவில் ஜெயிலர் 2 திரைப்படம் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக ரிலீஸிற்கு முன் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 வசூல் வேட்டை.. முன்பதிவில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த் | Rajinikanth Jailer 2 Pre Booking

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US