ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு.. அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பித்த ரஜினி - கமல்
ஜெயிலர் 2
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2023ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜெயிலர். இப்படம் மாபெரும் வசூல் வேட்டை நடத்தி இண்டஸ்ட்ரி ஹிட்டானது.
இந்த வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 படம் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நாளையுடன் நிறைவடைகிறது.

ஆம், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நாளையுடன் நிறைவடைகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதன்பின் போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடந்து ஜூன் மாதம் இப்படம் வெளிவரவிருக்கிறது.
ரஜினி - கமல்
ஜெயிலர் 2 படத்தை முடித்த கையோடு ரஜினிகாந்த் - கமல் ஹாசன் இணையும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் ரஜினி 173. ஆனால், நெல்சன் இயக்கத்தில் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. அதற்கான புரோமோ வீடியோ விரைவில் எடுக்கப்போவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.