நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியானால் முதல் நாளில் இத்தனை கோடி வசூலிக்குமா?
ரஜினிகாந்த்
இந்திய சினிமா நடிகர்கள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் யார் என்றால் ரஜினி தான். இவரது படங்கள் தமிழகத்தை தாண்டி மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு பெறும்.
அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைக்கிறார்.
சன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்து வருகிறார்கள், படப்பிடிப்பும் அண்மையில் சூப்பரான பாடல் காட்சி படபிடிப்புக்கு பிறகு முடிவடைந்துள்ளது.
படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
முதல் நாள் வசூல்
படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு கருத்துக் கணிப்பு நடந்துள்ளது.
அதாவது ரஜினியின் ஜெயிலர் படம் வெளியானால் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும் என்ற பேச்சு ரசிகர்களிடம் இருக்கிறது.
அண்ணாத்த படத்தை விட இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருப்பதால் முதல் நாளில் படம் ரூ. 70 கோடிக்கு மேல் வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் ஜுலை 28ம் தேதி நேரு அரங்கில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
நடிகராக கெத்து காட்டும் எஸ்.ஜே.சூர்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- இத்தனை கோடிகளா?

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
