ஜெயிலர் பட முதல் நாள் வசூலுக்கு வந்த சிக்கல்! ரஜினி ரசிகர்கள் ஷாக்
ஜெயிலர்
நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்த இசை வெளியீட்டு விழா எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.
பீஸ்ட் பட தோல்விக்கு பிறகும் நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன் என ரஜினி கூறியது, மற்றும் கழுகு - காகம் என குறிப்பிட்டு மறைமுகமாக விஜய்யை தாக்கி பேசியது என பல பரபரப்பான சம்பவங்கள் அந்த இசை வெளியீட்டு விழாவில் நடந்தது.
அதிகாலை காட்சி இல்லை
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் படத்தின் முதல் காட்சிகள் எல்லாம் காலை 9 மணிக்கு பிறகு தான் தொடங்க இருக்கிறதாம்.
அதிகாலை காட்சிகள் வர வாய்ப்பில்லை என சென்னையின் பிரபல தியேட்டரான வெற்றி தியேட்டர் உரிமையாளர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
இதனால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதிகாலை சிறப்பு காட்சிகள் இல்லை என்றால் முதல் நாள் ஓப்பனிங் வசூலில் பாதிப்பு இருக்கும்.
Looks like #Jailer FDFS in Chennai will start only after 9am !!!
— Rakesh Gowthaman (@VettriTheatres) July 30, 2023
ரத்னவேலுவை கொண்டாடும் நெட்டிசன்கள்.. ஜாதிவெறி காட்டிய வில்லனை ஹீரோவாக்கிய பதிவுகள்