ரஜினி-கமல் இணையும் படத்தின் வில்லன் இவரா?... செம கூட்டணியா இருக்கேபா...
ரஜினி-கமல்
தமிழ் சினிமா என்று எடுத்தாலே முதலில் நம் நினைவில் நியாபகம் வருவது ரஜினி-கமல், அதன்பின் மற்ற கலைஞர்கள் வருவார்கள்.
ரசிகர்கள் பெரிதும் கொண்டாடும் இந்த இரண்டு ஜாம்பவான்கள் பல வருடங்களுக்கு பிறகு இணைந்து படம் நடிக்கிறார்கள் என்றால் சும்மாவா, தமிழ் சினிமாவே சும்மா அதிர்கிறது.

இவர்கள் இணைந்து படம் நடிப்பார்களா என நினைக்கும் காலத்தில் பட அறிவிப்பு வர அதே வேகத்தில் படத்தின் முதல் புரொமோ வீடியோவும் வெளியானது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் இன்பநிதி தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைக்க உள்ளார்.
வில்லன்
ரஜினி-கமல் இருவருமே செம கெத்தான லுக்கில் வர நெல்சன் மற்றும் அனிருத் அந்த புரொமோ வீடியோவில் இடம்பெறுகிறார்கள். யார் ஹீரோ என்ற பெரிய கேள்வியுடன் வீடியோ முடிகிறது.
47 ஆண்டுகளுக்குப் பிறகு கமலும் ரஜினியும் இணையும் இப்படத்தில் வில்லன் யார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

ரஜினி ஹீரோவாக நடிக்க கமல் வில்லனாக நடிப்பார் என கூறப்பட்ட நிலையில் புதிய தகவலாக இந்த படத்தில் வில்லனாக மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்முட்டி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த செய்தி குறித்து உறுதியான தகவல் ஒன்றும் வரவில்லை.
