மகள் ஐஸ்வர்யாவால் ரஜினிக்கு வந்த சோதனை.. இவருக்கு இப்படியொரு நிலைமையா?

By Kathick Jan 16, 2024 03:00 AM GMT
Report

ரஜினிகாந்த் 

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நம்பர் 1 ஹீரோவாக இருக்கிறார். ஜெயிலர் வெற்றிக்கு பின் மாஸ் கம் பேக் கொடுத்து மீண்டும் தான் ஒரு சூப்பர்ஸ்டார் என நிரூபித்துள்ளார்.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் லால் சாலம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை ரஜினியின் மகளும் பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.

மகள் ஐஸ்வர்யாவால் ரஜினிக்கு வந்த சோதனை.. இவருக்கு இப்படியொரு நிலைமையா? | Rajinikanth Lal Salam Movie Problem

விக்ராந்த் மற்றும் விஷ்ணு இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக தயாராக இருந்தது.

ரஜினிக்கு வந்த சோதனை

ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டது. அடுத்த மாதம் தான் லால் சலாம் திரைப்படம் திரைக்கு வருகிறது என கூறப்படுகிறது.

மகள் ஐஸ்வர்யாவால் ரஜினிக்கு வந்த சோதனை.. இவருக்கு இப்படியொரு நிலைமையா? | Rajinikanth Lal Salam Movie Problem

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ

சொன்ன தேதியில் லால் சலாம் திரைப்படம் வெளியாகாமல் போனதற்கு காரணம், இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை இதுவரை விற்பனை ஆகாமல் இருப்பது தான் என்கின்றனர். என்னப்பா சொல்லறீங்க ரஜினியின் படத்திற்கே இப்படியொரு நிலைமையா என திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், தனது மகளின் இயக்கத்தில் உருவான லால் சலாம் படம் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகாமல் இருந்தால், ரஜினிகாந்தே இதற்கான முயற்சியை எடுத்துவிட்டாராம்.

மகள் ஐஸ்வர்யாவால் ரஜினிக்கு வந்த சோதனை.. இவருக்கு இப்படியொரு நிலைமையா? | Rajinikanth Lal Salam Movie Problem

ஆம், சன் நிறுவனத்திற்கு உடனடியாக போன் கால் செய்து, லால் சலாம் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுள்ளார். ரஜினி சாரே போன் செய்ததனால் லால் சலாம் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. இதன்பின் தான் லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்ததாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US