தன்னை பெற்றெடுத்த அம்மா, அப்பா சிலையை வீட்டிற்குள் வைத்திருக்கும் ரஜினிகாந்த்.. முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்
நடிகர் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.
இதையடுத்து தன்னுடைய மகள் இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கேமியோ ரோல் என்பதினால் 7 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.
இதன்பின் TJ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தலைவர்170 படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். லைக்கா தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது.
ரஜினியின் அம்மா, அப்பா
நடிகர் ரஜினிகாந்த் ராமோஜி ராவ் மற்றும் ரமாபாய் எனும் தம்பதிக்கு பிறந்தவர் என்பதை நாம் அறிவோம். அவர்களுடைய புகைப்படம் கூட ஒரு உள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அம்மா, அப்பாவின் உறவு சிலை ஒன்றை தனது வீட்டில் வைத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த சிலையை தீவிர ரசிகர் ஒருவர் தான் ரஜினிகாந்துக்கு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
ஆஸ்கர் விருதை கையில் ஏந்திய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்.. இயக்குனருக்கு ரூ. 1 கோடி ஊக்கத்தொகை வழங்கி கௌரவிப்பு

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
