ஆஸ்கர் விருதை கையில் ஏந்திய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்.. இயக்குனருக்கு ரூ. 1 கோடி ஊக்கத்தொகை வழங்கி கௌரவிப்பு
ஆஸ்கர்
கடந்த 13ஆம் தேதி 95வது ஆஸ்கர் நடைபெற்றது. இதில் சிறந்த பாடல் மற்றும் சிறந்த ஆவண குறும்படம் என்ற இரு பிரிவில் இந்தியாவிற்கு இரு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது.
கௌரவித்த முதல்வர்
இந்நிலையில், இதில் சிறந்த ஆவண குறும்படம் என ஆஸ்கர் விருதை வென்ற The Elephant Whisperers திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கொன்சால்வேஸ்-யை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குனர் கார்த்திகி கொன்சால்வேஸ்-க்கு ரூ. 1 கோடி ஊக்கத்தொகை வழங்கி கெளரவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதுமட்டுமின்றி ஆஸ்கர் விருதை தனது கரங்களால் ஏந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
முதல்வரை சந்தித பின் பேட்டியில் பேசிய இயக்குனர் கார்த்திகி கொன்சால்வேஸ் 'ஆஸ்கர் விருதை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தது மிகவும் பெருமையாக உள்ளது' என தெரிவித்துள்ளார்.
150 கோடியில் தனுஷ் கட்டிய பிரம்மாண்ட வீடு.. வெளிந்த வீட்டின் உள்புற புகைப்படங்கள்