ராஜமௌலி கூட தொடமுடியாத ரஜினிகாந்தின் சாதனை!
சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து 1995 -ஆம் ஆண்டு வெளியான முத்து திரைப்படம் தமிழ் நாட்டில் மாஸ் ஹிட் ஆனது. இப்படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார்.
இதில் மீனா, சரத் பாபு, ராதா ரவி, செந்தில், வடிவேலு போன்ற நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். முத்து படத்திற்கு இசைப்புயல் இசையமைத்திருப்பார். தற்போது வரை இந்த படம் மக்களால் கொண்டாடப்படுகிறது.
காலம் கடந்தும் தொட முடியாத சாதனை
ரஜினியின் "முத்து" திரைப்படம் ஜப்பான் நாட்டிலும் திரையிடப்பட்டது. இந்த படத்திற்காக ஜப்பான் நாட்டு மக்கள் கொடுத்த நல்ல வரவேற்பால் படம் 22 கோடி வசூலானது.
இதன் மூலம் ஜப்பானில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
சமீபத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான "ஆர்.ஆர்.ஆர்" படத்தை ஜப்பான் மொழியில் டப் செய்து வெளியிட்டனர். இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பல கோடி செலவு செய்யப்பட்டது.
அண்மையில் கிடைத்த தகவலின்படி "ஆர்.ஆர்.ஆர்" படத்தின் மொத்த வசூலே 20 கோடி தான் என்று தெரியவந்துள்ளது. ஜப்பான் நாட்டில் ரஜினிகாந்தின் "முத்து' படத்தின் சாதனையை தற்போது வரை எந்த இந்திய படமும் முறியடிக்கவில்லை.
படவாய்ப்புக்காக நடிகைகள் படுக்கைக்கு வரணுமா.. நான் இதைத்தான் செய்வேன்: கீர்த்தி சுரேஷ் அதிரடி