உயிருக்கு உயிராக நேசித்தவர்.. எம். சரவணன் மறைவுக்கு ரஜினிகாந்த் உருக்கம்!
ஏ.வி.எம்.சரவணன்
ஏ.வி.எம் நிறுவனர் ஏ.வி.மெய்யப்பனின் மகனுமான மூத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன். புகழ்பெற்ற இந்திய தயாரிப்பாளர்களில் ஒருவரான எம். சரவணன் அவர்களுடைய வயது 86.
அவர் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வயது மூப்பின் காரணமாக காலமானார்.தற்போது அவரது உடல் ஏவிஎம் ஸ்டியோ வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரை இறுதியாக காண முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதனை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் ஏவிஎம் சரவணனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் உருக்கம்!
அதில், " எம்.சரவணன் மிகப்பெரிய மனிதர், ஜென்டில் மேன் என்பதற்கு பெரும் எடுத்துக்காட்டு இவர்தான். இவரது உள்ளமும் வெள்ளைதான், சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தவர்.
என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர். நான் ஏவிஎம் ஸ்டுடியோவில் 9 படங்களை செய்துள்ளேன். அந்த 9 படங்களும் ஹிட் தான்.
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
