'நண்பர் சசிகுமாருக்கு வெற்றிப் படம்' - அயோத்தி படத்தை பாராட்டி பதிவு வெளியிட்ட ரஜினிகாந்த்

By Kathick Apr 11, 2023 05:24 AM GMT
Report

அயோத்தி

மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து கடந்த கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் அயோத்தி.

இப்படம் வெளிவந்த நாளில் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை. ஆனால், அதன்பின் இப்படத்திற்கு மக்கள் கூட்டம் எதிர்பார்க்காத அளவில் வர துவங்கியது.

திரையுலக நட்சத்திரங்களும் இப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டு மழையை பொழிந்தனர். திரையரங்கில் வெற்றியடைந்த இப்படம் கடந்த வாரம் 7ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளிவந்தது.

ரஜினிகாந்த் பாராட்டு

இந்நிலையில் தற்போது படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அயோத்தி படத்தையும், படக்குழுவையும் பாராட்டி பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில் 'அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!' என கூறியுள்ளார். 


இதற்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் சசிகுமார் நெழிந்துபோய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் 'நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார்' என கூறியுள்ளார் சசிகுமார்.

தோல்வியடைந்த சீமராஜா படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US