நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய ரஜினிகாந்த்.. பா. ரஞ்சித் மகிழ்ச்சி

Report

நட்சத்திரம் நகர்கிறது

பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 31ஆம் தேதி வெளியான திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. இப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் என பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய ரஜினிகாந்த்.. பா. ரஞ்சித் மகிழ்ச்சி | Rajinikanth Praised Ranjith Movie

இப்படம் வெளிவந்த நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் மட்டுமின்றி இப்படத்தை பார்த்த பல பிரபலங்களும் படம் அருமையாக உள்ளது என சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பாராட்டிய ரஜினி

அந்த வகையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் பா. ரஞ்சித்தை தொலைபேசியில் அழைத்து தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதனை ஒரு பதிவாக இயக்குனர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய ரஜினிகாந்த்.. பா. ரஞ்சித் மகிழ்ச்சி | Rajinikanth Praised Ranjith Movie

இதில் " இதுவரை நீங்கள் எடுத்த படங்களிலேயே இதுதான் தி பெஸ்ட் படம். இப்படத்தில் உங்களது இயக்கம், எழுத்து, கதாபாத்திரங்கள் தேர்வு, கலை, ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது " என ரஜினி பாராட்டினார் என்று பதிவு செய்துள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US