இயக்குனர் முன் கால்மேல் கால் போட்டு ஹீரோஸ் சிகரெட் பிடிக்கிறாங்க.. ரஜினிகாந்த் இப்படி செய்தாரா!
மீசை ராஜேந்திரன்
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் மீசை ராஜேந்திரன். இவர் கடந்த ஆண்டு லியோ படம் குறித்தும், விஜய் பற்றியும் பேசிய பிறகு வைரலாக பேசப்பட்டு வருகிறார்.
இவர் கேப்டன் விஜகாந்த்திற்கு மிகவும் நெருக்கமான நபர்களில் ஒருவர். அவருடைய தீவிர ரசிகர்கரும் ஆவார். இவர் ஒரு பேட்டியில் கூறிய சுவாரஸ்யமான விஷயம் குறித்து தான் தற்போது பார்க்கப்போகிறோம்.
ரஜினிகாந்த் செய்த விஷயம்
இந்த பேட்டியில் சிவாஜி படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை கூறியுள்ளார். இதில் "சிவாஜி படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் சாரிடம் பேசியபோது, விஜயகாந்த் குறித்து அக்கறையாக விசாரித்தார். கேப்டன் எப்படி இருக்கிறார் நலமா என கேட்டார்”.
”அப்போது அவர் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விடவில்லை. அதனால் படப்பிடிப்பில் சிகெரெட் பிடித்துக்கொண்டு என்னுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த பக்கம் சிவாஜி படத்தின் இயக்குனர் ஷங்கர் வந்தார். இயக்குனர் ஷங்கரை பார்த்தவுடன் கையில் இருந்த சிகரெட்டை கீழே போட்டுவிட்டார்”.
”ஒரு மிகப்பெரிய நட்சத்திரம் இயக்குனருக்கு தரும் மரியாதையை நான் அங்கு தான் பார்த்தேன். இப்போது இருக்கும் சில நடிகர்கள் இயக்குனர் முன் கால்மேல் கால் போட்டு சிகரெட் பிடிக்கிறாங்க. ஆனால், ஒரு இயக்குனர் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காக ஷங்கரை பார்த்தவுடன் சிகரெட்டை கீழே போட்டார் ரஜினிகாந்த்” என கூறியுள்ளார்.