மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறாரா ரஜினிகாந்த்? உண்மை இதுதான்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ஜெயிலர்.
இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படம் சரியான வரவேற்பை பெறவில்லை. தற்போது ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
ரஜினியை தாண்டி இப்படத்தில் சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா, நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
உண்மை இதுதான்
அடுத்து ரஜினிகாந்த் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் மறுத்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, மாரி செல்வராஜ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் கதை கூறி இருக்கிறார். ரஜினிகாந்த் நடிக்க மறுத்துள்ளார் என்று இணையத்தில் தகவல் உலா வந்தது. ஆனால், அது போன்ற எதுவும் நடக்கவில்லை. வெளிவந்த தகவல் எதுவும் உண்மை இல்லை.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; நல்லா இருக்குய்யா உங்க ரகசிய கூட்டு - விஜய்யை வெளுத்த பிரபலம் IBC Tamilnadu
