சூப்பர்ஸ்டார் பட்டம் சர்ச்சைக்கு ரஜினி கொடுத்த தரமான பதிலடி..வைரலாகும் பதிவு
ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் வருகிற 10ம் தேதி வெளியாக இருக்கிறது.
தற்போது இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. முதல் பாடல் காவாலா வெளியாகி ட்ரெண்ட் ஆன நிலையில் அடுத்து ஹுகும் என்ற இரண்டாவது பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினி கொடுத்த பதிலடி
கடந்த ஜனவரி மாதம் வாரிசு திரைப்படம் வெளியான போது அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று பலரும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் "பெயர தூக்க நாலு பேரு... பட்டத்த பறிக்க நூறு பேரு" என் ஹுகும் பாடலின் வரிகள் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் பட்டதற்கு எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்த ரஜினி ஜெயிலர் படத்தின் பாடல் வரிகள் மூலம் பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் கதை இது தானா?.. எப்படி இருக்குனு பாருங்க

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
