நல்ல கதை தான், ஆனால்.. சிபி சக்ரவர்த்தியை நிராகரித்தது ஏன்? ரஜினி சொன்ன காரணம்
நடிகர் ரஜினி அடுத்து நடிக்கும் படத்தினை பற்றிய அறிவிப்பு இன்று வெளிவந்தது. தர்மன் என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அதில் ரஜினி டாக்டர் ஆக நடிக்கிறாராம்.
படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, அஸ்வத் இந்த படத்தின் நான்காவது இயக்குனர் என தெரிவித்து இருக்கிறார்.

ரஜினி பேச்சு
"அஸ்வத் மாரிமுத்து நான்காவது இயக்குனர். முதலில் கே.எஸ்.ரவிக்குமாரை முடிவு செய்து இருந்தோம். அது சரியாக வரவில்லை. அதன் பின் சுந்தர்.சி. அவருக்கு வேறு படம் இருந்ததால் விலகிக்கொண்டார்."
"அதன் பின் சிபி சக்ரவர்த்தி. அவர் சொன்ன கதை நன்றாக இருந்தது. ஆனால் ரொம்ப சென்சிடிவ் சப்ஜெக்ட். அணு ஆயுதங்கள் பற்றியும், அணு விஞ்ஞானி பற்றி தான் கதை. அப்கானிஸ்தான், ரஷ்யா என பல இடங்களில் ஷூட்டிங் செய்ய வேண்டியது."
"நல்ல கதை தான். ஆனால் ரொம்ப கவனமாக கையாள வேண்டிய subject. நேரமும் அதிகம் எடுத்துக்கொள்ளும். அதனால் அதை நாம் அப்புறம் செய்துகொள்ளலாம் என கூறிவிட்டேன். அதன் பிறகு தான் அஸ்வத் மாரிமுத்து உள்ளே வந்தார்" என ரஜினி கூறி இருக்கிறார்.
Superstar #Rajinikanth clarifies about Director changes:
— Laxmi Kanth (@iammoviebuff007) June 24, 2026
• Ashwath is the 4th director for this film.. We fixed KSRavikumar initially.. It didn't work out.. Then SundarC.. He had other commitment.. it got delayed.. He said he's stepping out..
• Then cibi chakravarthy.. The… pic.twitter.com/CC3D3OITJO
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri