தோல்வியடைந்த தர்பார் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகவுள்ளது. நெல்சன் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க கன்னட திரையுலக முன்னணி நடிகர் சிவராஜ்குமார் கமிட்டாகி இருப்பாதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் ரம்யா கிருஷ்னன், பிரியங்கா மோகன், சிவகார்திகேயன், யோகி பாபு என பல நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.
தர்பார் படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பளம்
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தர்பார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்தது.
ஆனால், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை முளுமையாக பூர்த்தி செய்யாத இப்படம் தோல்வியை தளுவியது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் சுமார் ரூ. 108 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இசைஞானி இளையராஜா இசையில் வெளிவந்த சிறந்த பாடல்கள்.. ஒரு சிறப்பு பார்வை