90ஸ் காலகட்டத்தில் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம், கமல் ஹாசனை விட இரண்டு மடங்கு அதிகம்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு பின் லால் சலாம் படத்தில் நடிக்கிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் துவங்கியது. லால் சலாம் படத்தில் 7 நாட்கள் மட்டுமே நடிக்கும் ரஜினிகாந்த் அதற்கு பின் தன்னுடைய 170 படத்தில் நடிக்கவுள்ளார்.

லைக்கா தயாரிக்கும் இப்படத்தை TJ ஞானவேல் இயக்குகிறார். ஜெய் பீம் படத்திற்கு பின் இவர் இயக்கம் படம் இதுவே ஆகும். நடிகர் ரஜினிகாந்தின் தற்போதைய சம்பளம் ரூ. 100 கோடியை தாண்டியுள்ளது.
ரஜினி வாங்கிய சம்பளம்
ஆனால், 90ஸ் காலகட்டத்தில் ரஜினிகாந்த் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்று தெரியுமா. 90ஸ் காலக்கட்டத்தில் நடிகர் ரஜினி ரூ. 60 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

அந்த நேரத்தில் கமல் ஹாசன் ரூ. 20 லட்சம் மட்டுமே சம்பளமாக வாங்கிவந்துள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது கமல் ஹாசனை விட இரண்டு மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாலினியை தாண்டி வளர்ந்த அஜித்தின் மகள்!! லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்