லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கே ரஜினிகாந்த் இத்தனை கோடி சம்பளம் பெறுகிறாரா?
லால் சலாம்
3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
லைகா நிறுவனத்துடன் கைகோர்த்து அவர் இயக்கும் படத்தின் பெயர் லால் சலாம், விஷ்ணு மற்றும் விக்ராந்த் முன்னணி நடிகர்களாக நடிக்க இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார்.
இதில் ரஜினிகாந்த் முஸ்லீமாக நடிக்க உள்ளதாகவும், கடைசியாக பாட்ஷா படத்தில் முஸ்லீமாக நடித்திருக்கிறாராம்.
தற்போது 28 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அதுபோன்ற ஒரு வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகரின் சம்பளம்
இப்படத்திற்காக 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள ரஜினிக்கு ரூ. 25 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த பிக்பாஸ் புகழ் தாமரையின் புதிய வீடு- அவரே வெளியிட்ட வீடியோ