படம் மீதான நம்பிக்கை போச்சு!. இனி மகள் பேச்சை கேட்க மாட்டேன்..ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த் பேச்சு
ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
அதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் முன் தோன்றி பல விஷயங்களை பேசி இருந்தார்.
ஆலோசனை கேட்க மாட்டேன்
இந்நிலையில் 2018 -ம் ஆண்டு காலா படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், எந்திரன் படத்தை அடுத்து உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பின் படங்களில் நடிக்க ஆசை வந்தது.
என் மகள் அதிபுத்திசாலி, அவர் என்னிடம் அனிமேஷன் படத்தில் நடிக்கலாம் என்று ஆலோசனை கொடுத்தார். அந்த காலகட்டத்தில் தொழில்நுட்பம் பெரிய அளவில் இல்லை. படத்தில் தரம் நன்றாக இருக்கும் வேண்டும் என்றால் அதிக அளவில் பணம் செலவாகவும் என்று சொன்னார்கள்.
எனக்கு கோச்சடையான் படம் மீது நம்பிக்கை இல்லை. அதானல் எடுத்த வரை போதும் அப்படியே ரிலீஸ் பண்ணுங்க என்று சொல்லிவிட்டேன்.
நான் நினைத்த படி படம் சரியாக போகவில்லை. அப்போதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. எப்போதும் அதிபுத்திசாலி பேச்சை கேட்க கூடாதது, அவர்களுடன் பழக கூடாது என்று ரஜினிகாந்த் பேசி இருந்தார்.
தற்போது இவரின் இந்த பேச்சு சோசியல் மீடியா தலத்தில் வைரலாகி வருகிறது.
ஜெயிலர் படத்தில் நடிக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
