அரை பாட்டில் பீர்.. ஊர்ல இருக்கிற கிசுகிசு எல்லாம் கேட்ட இளையராஜா.. மேடையில் கூறிய ரஜினிகாந்த்
இளையராஜா 50
50ஆண்டுகளை திரையுலகில் நிறைவு செய்து மாபெரும் சாதனை படைத்துள்ள இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய இளையராஜா பல விஷயங்களை மேடையில் பகிர்ந்துகொண்டார். அதில் ரஜினிகாந்த் குறித்து பேசிய அவர், "ரஜினிகாந்த் எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே போன்கால் பண்ணி, 'நாம் பண்ணியதெல்லாம் நான் சொல்லாப்போகிறேன்' என்றார். நாம் பண்ணியது என்னவென்றால், பெல் பாட்டம் போட்டுட்டு, தொப்புளுக்கு மேல் பேண்ட் போட்டுக்கிட்டு, கிராப் வெட்டிக்கிட்டு, கையில் பட்டையா ஒரு வாட்ச் போட்டுக்கிட்டு, இயக்குநர் மகேந்திரனும் நீங்களும், நானும் உக்காந்து குடிச்சோம்.
ஸ்டூடியோவில் வந்து என்கிட்ட சொல்கிறார், 'குடிச்சோம், நினைவு இருக்கா உங்களுக்கு?' என்று. 'ஆமாம், அப்புறம்.. என்றெதுமோ, அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு ஆடிய ஆட்டம் இருக்கேன், பாருங்கன்னு சொன்னாரு. அதை சொல்லப்போறேன் என சொன்னார். 'நீங்க என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கோங்க, அதை பற்றி எனக்கு கவலைஇல்லை' என்றார்.
இளையராஜா இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே, தனது இருக்கையில் இருந்து எழுந்து, இளையராஜா பேசிக்கொண்டிருந்த மைக்கை பிடித்து ரஜினிகாந்த் பேச துவங்கிவிட்டார்.
அவர் கூறியதாவது:
விஜிபியில் ஜானி படத்திற்கான கம்போசிங் போயிட்டு இருக்கு. இளையராஜா, மகேந்திரன் வந்தாங்க. இரவில் நானும், மகேந்திரனும் டிரிங்க்ஸ் குடித்தோம். இளையராஜாவிடம் கேட்டோம், சாமி என்னனு? ம்ம்ம் என கூறினார். பீர் அரை பாட்டில் அடிச்சிட்டு இவர் போட்ட ஆட்டம் இருக்கே.. அய்யயோ, இரவு 3 மணி வரைக்கும் ஆட்டம்.
அப்போது மகேந்திரன் இந்த பாடல் குறித்து கேட்டார், அதற்கு இளையராஜா 'சும்மா இருங்க சார்' என சொல்லிவிட்டு, ஊர்ல இருக்க கிசுகிசு எல்லாம் கேட்டார். குறிப்பாக ஹீரோயின் பற்றி. அண்ணன் பெரிய லவ், அதான் பாடலெல்லாம் இப்படி. அப்படி இருந்தவர், இன்னும் நிறைய இருக்கு, இன்னொரு வாட்டி நான் வெச்சிக்கிறேன்" என நகைச்சுவையாக ரஜினிகாந்த் பேசினார்.