ரஜினி173 இயக்குனர் இவர்தான்! நாளை வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. எதிர்பார்க்காத கூட்டணி
கூலி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில் அடுத்து ரஜினி தான் நடிக்கும் படத்திற்கு கதை தேர்வு செய்வதில் அதிகம் முனைப்பு காட்டி வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் தான் ரஜினி அடுத்த படம் உருவாக இருக்கிறது. தலைவர்173 என தற்காலிகமாக இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தை சுந்தர்.சி இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் முன்பு வெளிவந்தது. ஆனால் சில தினங்களில் கருத்து வேறுபாடு காரணமாக சுந்தர்.சி அந்த ப்ராஜெக்ட்டில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துவிட்டார். கதையில் அதிக மாற்றங்கள் செய்யும்படி ரஜினி கூறியதால் தான் சுந்தர்.சி விலகியதாக கிசுகிசுக்கப்பட்டது.
ரஜினிக்கு பிடிக்கும் கதை கிடைக்கும் வரை தேடிக்கொண்டே இருப்போம் என கமல்ஹாசனும் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

நாளை அறிவிப்பு
இந்நிலையில் தலைவர்173 படத்தின் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை ஜனவரி 3ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
டான் பட புகழ் இயக்குனர் சிபிசக்கரவர்த்தி தான் தலைவர்173 படத்தை இயக்க போகிறார் என தகவல் வந்திருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்திருந்த டான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது.
Thalaivar Nirantharam 🔥 #Arambikalama #Thalaivar173 #SuperStarPongal2027 @rajinikanth @ikamalhaasan #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/1arWxZh5sh
— Raaj Kamal Films International (@RKFI) January 2, 2026
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan