லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் நடிக்கவுள்ள டாப் நடிகர்.. செம மாஸ் கூட்டணி

Report

மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி

தமிழ் சினிமாவில் தற்போது சென்சேஷன் இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

கமல் ஹாசன் நடிப்பில் உருவான இப்படம் வசூலில் ரூ. 400 கோடியை கடந்த சாதனை படைத்துள்ளது. விக்ரம் படத்திற்கு முன்னர் கமல் ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப்பதாக இருந்தது.

ஆனால், அப்போது சில காரணங்களால் ரஜினிகாந்த் அப்படத்தில் நடிக்கமுடியாமல் போய்விட்டது. அதன்பின் தான், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து விக்ரம் படம் வெளிவந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் நடிக்கவுள்ள டாப் நடிகர்.. செம மாஸ் கூட்டணி | Rajinikanth To Act In Lokesh Kanagaraj Direction

இந்நிலையில், மீண்டும் இந்த மாஸ் கூட்டணி அமையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்கப்போவதாக தகவல் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தை கமலுடன் இணைந்து ரஜினியும் தயாரிக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர். விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US