ரஜினிக்கு ஜோடியாகும் 32 வயது நடிகை.. முதல் முறையாக இணையும் ஜோடி
ஜெயிலர்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி துவங்குகிறது.

ஏற்கனவே இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்கப்போகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ரஜினிக்கு ஜோடியாகும் நடிகை
இந்நிலையில், தற்போது அந்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. ஆம், ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்திற்கு ஜோடியாக தமன்னா நடிப்பது இதுவே முதல் முறையாகும். விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri