திரையரங்க ரிலீஸ் முன்பே பல கோடிக்கு வியாபாரம்... எப்போது ரஜினியின் வேட்டையன் ஓடிடி ரிலீஸ் தெரியுமா?
வேட்டையன்
தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் என்றுமே சூப்பர் ஸ்டாராக வலம்வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.
இளம் கலைஞர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் நடிப்பு, நடனம், ஆக்ஷன், பஞ்சு வசனங்கள் என மாஸ் காட்டி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் படம் வெளியாகி இருந்தது.
ஆபரேஷன் செய்து ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த் கூலி படப்பிடிப்பில் இணைவது எப்போது?- லோகேஷ் கனகராஜ் தகவல்
ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் போட்ட பணத்தை எடுத்துவிட்டது. இப்போது படத்தின் முழு பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதை காண தான் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
ஓடிடி ரிலீஸ்
திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆவது வழக்கம். திரையரங்க ரிலீஸ் பிறகு தான் ஓடிடியில் விற்கப்படும், ஆனால் வேட்டையன் படத்தின் வியாபாரம் அப்படி இல்லை.
இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஓடிடி வியாபாரம் நடந்துள்ளது. ரூ. 90 கோடிக்கு கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது. ரஜினியின் இந்த வேட்டையன் படம் ஒரு மாதத்திற்குள் ஓடிடியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதுவரை ஓடிடி ரிலீஸ் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.