விஜய் 100 ருபாய் பிரியாணி சாப்பிட்டால் மட்டும் சிம்பிளா? Simplicity பற்றி ரஜினி பேசிய வீடியோ வைரல்
சமீபத்தில் விஜய் சன் டிவிக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் இயக்குனர் நெல்சன் தான் விஜய்யிடம் கேள்விகள் கேட்டார்.
100 ருபாய் பிரியாணி
விஜய் ஒருமுறை நெல்சனை டின்னருக்கு அழைத்து இருக்கிறார். அப்போது சாப்பிடலாமா என கேட்டுவிட்டு விஜய் 100 ருபாய் பிரியாணியை சாப்பிட்டார். எப்படி இவ்ளோ சிம்பிளாக இருக்கீங்க என நெல்சன் கேட்டார்.
விஜய்யும் அந்த பிரியாணி நன்றாக டேஸ்ட்டாக இருக்கும் என கூறினார். ஆனால் சிம்ப்ளிசிட்டி பற்றி எதுவும் கூறவில்லை.

ரஜினி வீடியோ
இந்நிலையில் தற்போது ரஜினி 2.0 ரிலீஸ் நேரத்தில் அளித்த பேட்டி வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது. அதில் சிம்ப்ளிசிட்டி பற்றி பேசி இருக்கிறார் அவர்.
"சிம்ப்ளிசிட்டி என்றால் என்ன என புரியவில்லை. நான் போவது BMW கார். இருப்பது போயஸ் கார்டன் வீட்டில், சாப்பிட போவதெல்லாம் 5 ஸ்டார், 7 ஸ்டார் ஹோட்டலில். நான் சிம்பிள் என சொல்வது எப்படி என புரியவில்லை" என ரஜினி கேட்டிருக்கிறார்.
இந்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள்.. விஜய் உண்மையிலேயே சிம்பிளானவரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Rajinikanth ❤️ https://t.co/TMy9GZU83A pic.twitter.com/g2tfArdG6X
— ?? (@D1OSPS) April 12, 2022