ஜெயம் ரவிக்கு போன் செய்த சூப்பர்ஸ்டார் ரஜினி! என்ன கூறினார்
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் படத்தினை பார்த்து தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். வயதானவர்கள் உட்பட குடும்பமாக ரசிகர்கள் பொன்னியின் செல்வனை பார்க்க வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பொன்னியின் செல்வன் நான்கு நாட்களில் மொத்தம் 250 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது. பல தசாப்தங்களாக இந்த கதையை படமாக்க பலரும் முயற்சித்த நிலையில் அதை செய்துமுடித்த இயக்குனர் மணிரத்னம் மற்றும் படத்தில் நடித்து இருந்த நடிகர்களுக்கும் தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஜெயம் ரவிக்கு போன் செய்த ரஜினி
இந்நிலையில் பொன்னியின் செல்வனில் நடித்து இருக்கும் ஜெயம் ரவிக்கு நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினி போன் செய்து பாராட்டி இருக்கிறார்.
"அந்த ஒரு நிமிட உரையாடல் என் நாளை, இந்த வருடத்தை, என் கெரியரை சிறப்பாக்கியது. உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் குழந்தைபோன்ற உற்சாகத்திற்கு நன்றி. உங்களுக்கு படமும், என்னுடைய performance-ம் உங்களுக்கு பிடித்திருந்தது எனக்கு நெகிழ்ச்சியானாது ரஜினி சார்" என ஜெயம் ரவி கூறி இருக்கிறார்.
That 1 minute conversation made my day, my year and added a whole new meaning to my career. Thank you Thalaiva for your kind words & childlike enthusiasm. I’m overwhelmed, humbled & blessed to know you loved the movie & my performance ?? @rajinikanth sir
— Arunmozhi Varman (@actor_jayamravi) October 4, 2022
வாரிசு படத்தில் நான் நடிக்கவில்லை.. பிரபல நடிகையின் பதிலால் ஷாக்கான ரசிகர்கள்