முதலமைச்சருக்கு போன் செய்த சூப்பர்ஸ்டார் ரஜினி.. எதற்காக தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்த் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போன் செய்து பேசி இருக்கிறார். அதன் விவரங்கள் இதோ.
உங்களில் ஒருவன்
ஸ்டாலினின் சுயசரிதை நூலான 'உங்களில் ஒருவன்' புத்தகத்தை படித்துவிட்டு அதற்காக வாழ்த்து கூற தான் ஸ்டாலினுக்கு போன் செய்திருக்கிறார் சூப்பர்ஸ்டார்.
அதற்காக நன்றி கூறி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார் ஸ்டாலின்.
முதலமைச்சர் ட்விட்
"உங்களில் ஒருவன் படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்' @rajinikanth அவர்களுக்கு நன்றி! உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது!"
இவ்வாறு ஸ்டாலின் ட்விட்டரில் குறிப்பிட்டு இருக்கிறார்.
'உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்' @rajinikanth அவர்களுக்கு நன்றி!
— M.K.Stalin (@mkstalin) March 23, 2022
உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது!
62 வது படத்திற்கு அஜித் வாங்கும் சம்பளம் இவ்வளவா?- நடிகர் கேட்டதை விட அதிகம் கொடுக்கும் தயாரிப்பாளர்