விஜய் படத்தில் முக்கிய வேடத்தில் இரண்டு பிக் பாஸ் போட்டியாளர்கள்.. அதில் ஒருவர் டைட்டில் வின்னர்
தளபதி 67
விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் வில்லனாக சஞ்சய் தத் மற்றும் கதாநாயகியாக திரிஷா உள்ளிட்டோர் தளபதி 67ல் கமிட்டாகியுள்ளதாக தெரிகிறது. இவர்களை தவிர்த்து மன்சூர் அலிகான், ஆனந்த் ராஜ், கவுதம் மேனன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கிறார்களாம்.
பிக் பாஸ் போட்டியாளர்கள்
இந்நிலையில், பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ராஜு மற்றும் பிக் பாஸ் 6 மைனா நந்தினி தளபதி 67ல் நடிக்கிறார்களாம். ராஜு நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதை நாம் அறிவோம். அதை அவரே பல இடங்களில் கூறியுள்ளார்.
