ஜூனியர் vs சீனியர்.. குக் வித் கோமாளியில் இந்த வாரம்.. அதிரடியான புரோமோ வீடியோ
பல சீசன்களை கடந்துள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த முறை புதிதாக நட்சத்திர ஜோடிகளை களமிறக்கியுள்ளனர். ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய வாழ்க்கை துணையுடன் இம்முறை இந்த போட்டியில் கலந்துகொண்டனர்.

மேலும் செப் தாமு, செப் கவுசிக் மற்றும் மாதம்பட்டி ரங்கராஜுடன் இணைந்து நடிகை ரோஜாவும் நடுவராக களமிறங்கியுள்ளார். இதுவரை நடைபெற்ற குக் வித் கோமாளி சீசன் 7-ல் இரண்டு ஜோடிகள் வெளியேறியுள்ளனர். நிஷா - ரியாஸ் ஜோடி முதலில் வெளியேறிய நிலையில், அதன்பின் சாந்தா - மகேந்திரன் ஜோடி கடந்த வாரம் வெளியேறினார்கள்.
இந்த வார புரோமோ
இந்த நிலையில், இந்த வார புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வாரம் குக் வித் கோமாளி ஸ்பெஷல் என்னவென்றால், கடந்த சீசன் 6 கலந்துகொண்ட போட்டியாளர்களான ராஜு, ஷபானா, உமைர் மற்றும் மதுமிதா ஆகியோர் மீண்டும் இந்த 7-வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

இதனால் இந்த வாரம் சீசன் 6 vs சீசன் 7 போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜு கடந்த சீசன் 6-ன் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புரோமோ:
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri