சோகத்தில் ஆழ்த்திய பிரபல நடன இயக்குனர் ராகேஷ் மாஸ்டரின் திடீர் மரணம்..
ராகேஷ் மாஸ்டர்
பிரபல நடன இயக்குனர் ராகேஷ் மாஸ்டர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவரின் இயற்பெயர் ராமராவ்.
திருப்பதியில் பிறந்த இவர் திரைப்பட நடன இயக்குனராக தன்னுடைய திரைப் பயணத்தை மேற்கொண்டு வந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட 1500 திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

இவர் கடந்த வாரம் படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டினம் சென்றிருந்தார். அங்கிருந்து ஹைதராபாத் திரும்பிய அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரணம்
53 வயதை கடந்த ராகேஷுக்கு நீரிழிவு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உடல் உறுப்புகள் செயலிழந்ததால், அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இவருடைய மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்கு திரைத்துறையினர் பலரும் அவரது உடலுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுக்கு நீங்க சரிபட்டு வரமாட்டீங்க.. விக்ரமிடம் கூறிய இயக்குனர்! எதற்காக தெரியுமா??