பைக்கில் ஸ்டண்ட் செய்து அசத்திய குக் வித் கோமாளி ரக்ஷன்.. மிரட்டலான வீடியோ இதோ
தொகுப்பாளர் ரக்ஷன்
கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் முதன் முதலில் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரக்ஷன்.
இதன்பின் கலக்கப்போவது யார், KPY சாம்பியன்ஸ் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், ஜோடி Fun ஆல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் பங்கேற்றார்.

இதனை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகம் ஆகிவிட்டார்.
மேலும், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர்ந்து மூன்று சீசன்களாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

குக் வித் கோமாளியில் பைக் ஸ்டண்ட்
இந்நிலையில், குக் வித் கோமாளி வரும் வாரம் நிகழ்ச்சியில், பைக்கை வைத்து ரக்ஷன் ஸ்டண்ட் செய்துள்ளார்.
அங்கு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..