லிப்லாக் காட்சியில் நடிப்பேன்.. ஆனா!! திருமணத்திற்கு பின் ஓப்பனாக பேசிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது இந்தி படங்களில் நடித்து பிரபலமாகியவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அயலான் படத்திற்கு பின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னாணியை காதலித்து சமீபத்தில் கோவாலில் ஆடம்பர ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கையை தொடங்கிய ரகுல் ப்ரீத் சிங், அதன்பின்பும் படங்களில் நடித்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது வரும் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 படம் உலகளவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ரகுல் ப்ரித் சிங் படத்தின் பிரமோஷன்களில் கலந்து கொண்டும் பேட்டியளித்தும் வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அடுத்த ஆண்டு வரை எனக்கு டேட் இல்லை என்ற கேள்விக்கு, நீங்களே வதந்திகளை பரப்புகிறீர்கள். ஆம், நிஜமா டேட் இல்லை, அதனால் முடியாது என்று கூறுகிறேன்.
கதை சரியில்லை என்று கூறி நிராகரித்து இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, இல்லை, ஆனால், கதை நன்றாக இருக்கிறது, எனக்கு அது சரிவராது என்று அவர்களிடம் சொல்லி இருக்கிறேன். நான் எப்போதும் என் சக நடிகர்களுடன் நட்பாக இருக்கிறேன், இதை வைத்து சர்ச்சையாக்க விரும்பவில்லை.
மேலும் பேசிய ரகுல், லிப்லாக் காட்சியில் நடிக்க கேட்டால் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, கதையை பொறுத்து இருக்கிறது. ஏற்கனவே அப்படி நடித்திருக்கிறேன். கதைக்கு பொறுத்தமாக, தேவையாக இருந்தால் நடிப்பேன். பப்ளிசிட்டிக்காக லிப்லாக் காட்சியை வைத்தால் நடிக்கமாட்டேன் என்று ரகுல் ப்ரித் சிங் கூறியிருக்கிறார்.

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
