14 மணிநேர தண்ணீருக்கு அடியில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் செய்த வேலை- ஆச்சரியப்படும் ரசிகர்கள்

By Yathrika Jun 13, 2023 04:20 AM GMT
Report

ரகுல் ப்ரீத் சிங்

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உட்பட சில வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

அடுத்து இவரது நடிப்பில் அயலான், இந்தியன் 2, தெலுங்கில் ஐ லவ் யூ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்த ஐ லவ் யூ ரொமான்டிக் த்ரில்லர் படம் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வரும் 16ம் தேதி வெளியாகிறது.

14 மணிநேர தண்ணீருக்கு அடியில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் செய்த வேலை- ஆச்சரியப்படும் ரசிகர்கள் | Rakul Preet Singh Stood Under Water For 14 Hours

நடிகை செய்த வேலை

இந்த படத்தில் ஒரு காட்சியில் தண்ணீருக்கு அடியில் இரண்டு நிமிடங்கள் மூச்சடக்கியபடி இருக்க வேண்டுமாம், அதற்காக ரகுல் ப்ரீத் சிங் கடுமையானப் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து ரகுல் ப்ரீத் சிங் கூறுகையில், ஸ்கூபா பயிற்சியாளர் ஜஹான் அடன்வாலா, தண்ணீருக்குள் மூச்சை அடக்குவதற்கு எனக்குப் பயிற்சியளித்தார்.

இப்படத்தில் ஒரு காட்சிக்காக நான் மதியம் 2 மணியில் இருந்து அதிகாலை 4 மணிவரை தண்ணீருக்குள்ளேயே இருந்தேன். கடும் குளிராக இருந்தது. ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் என் மீது வெதுவெதுப்பான நீரை ஊற்றுவார்கள்.

தண்ணீரில் உள்ள குளோரின் காரணமாக என் கண்கள் எரிந்தன. இருந்தாலும் அந்தச் சவாலை எதிர்கொண்டு நடித்தேன் என தெரிவித்துள்ளார்.

14 மணிநேர தண்ணீருக்கு அடியில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் செய்த வேலை- ஆச்சரியப்படும் ரசிகர்கள் | Rakul Preet Singh Stood Under Water For 14 Hours

முதன்முறையாக தனது மகன் மற்றும் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஊர்வசி- நாயகி போல் உள்ளாரே மகள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US