ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பெத்தி.. ரிலீஸ் தேதிக்கான டீசர் இதோ
கேம் சேஞ்சர்
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ராம் சரண். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கேம் சேஞ்சர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை.
இப்படத்தை தொடர்ந்து ராம் சரண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் பெத்தி. 1980 களில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
ரிலீஸ் தேதி
இப்படத்தை புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள். இளம் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் first லுக் போஸ்டர் வெளிவந்த நிலையில், இன்று பெத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவித்து கிலிம்ப்ஸ் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த வீடியோ..