ராம் சரணை வைத்து இயக்கும் படத்திற்கு ஷங்கர் இப்படியொரு டைட்டில் வைத்துள்ளாரா?- சூப்பரா இருக்கே
ராம் சரண்-ஷங்கர்
இயக்குனர் ஷங்கர் ரஜினியை வைத்து 2.0 படம் இயக்கிய பிறகு கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படம் இயக்க ஆரம்பித்தார். ஆனால் படத்திற்கு இடையில் பிரச்சனை ஏற்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இப்போது மீண்டும் பிரச்சனைகள் முடிந்து படப்பிடிப்பு நடக்கிறது.
இப்படத்தை தொடர்ந்து ஷங்கர், ராம் சரணை வைத்து புதிய படம் ஒன்றையும் இயக்கி வருகிறார். தற்போதைக்கு படத்தை RC12 என பெயரிட்டு வருகிறார்கள்.
பட டைட்டில்
இப்படத்தில் ராம் சரன் தலைமை தேர்தல் அதிகாரியாக நடித்து வருவதாகவும் இப்படத்திற்கு படக்குழு CEO அதாவது Chief Electoral Officer என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரூ. 170 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தில் நாயகியாக கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், நாசர், சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
நடிகை ராதிகா சரத்குமாரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- அவரது லேட்டஸ்ட் க்ளிக்