டிராப் ஆகிறதா ராமதாஸின் பயோபிக் திரைப்படம் ? லேட்டஸ்ட் தகவல்!!
சேரன்
தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா, பொற்காலம் மற்றும் ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்கள் மூலமாக முத்திரைப் பதித்தவர் இயக்குனர் சேரன்.
ஆட்டொகிராப் திரைப்படத்தின் மூலமாக நடிகராகவும் என்ட்ரி கொடுத்தார். இப்படம் நான்கு தேசிய விருதுகளையும் மற்றும் 6 தமிழக அரசின் விருதுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் தகவல்!!
இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான பாமக நிறுவனர் ராமதாஸின் வாழக்கை வரலாற்றுப் படமாக எடுக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தது.
இப்படத்தை பிரபல இயக்குனர் சேரன் இயக்குவதாகவும், ராமதாஸ் வேடத்தில் சரத்குமார் நடிப்பார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இப்படத்தில் இருந்து சரத்குமார் விலகிவிட்டதாகவும், டிராப் ஆகிவிட்டதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
