ராமராஜன் - நளினி மகள் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோகமா! நீங்களே பாருங்க
ராமராஜன்
80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த கதாநாயகன் ராமராஜன். இவருக்கு கிராமப்புறங்களில் ரசிகர்கள் பட்டாளமே ஏராளமானோர் உள்ளனர்.
ஹீரோவாக மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த ராமராஜன் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போனார். மேலும் தற்போது சாமானியன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாகவே ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

சிவகார்த்திகேயனிடம் பல முறை அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டேன், ஆனால்- மேடையில் வருத்தப்பட்ட வடிவுக்கரசி
நடிகர் ராமராஜன் நடிகை நளினியை 1987ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 13 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனமுடைந்து பேசிய ராமராஜன்
இந்த நிலையில், நடிகர் ராமராஜன் தனது மகள் குறித்து சோகமான விஷயம் ஒன்றை பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதில் " என் மகனுக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். என் பேரன் என்னை எப்பொழுதுமே மாடு தாத்தா என்றுதான் அழைப்பார். வெளிநாட்டில் அவர்கள் செட்டிலாகிவிட்டதால் வீடியோ காலில்தான் நான் பேசுவேன். ஆனால், என் மகளுக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் அவருக்கு ஒரு குழந்தை பிறக்கவில்லை என்பதுதான் எனக்கு மிகவும் வருத்தம். அவருக்கு குழந்தை பிறந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்" என பேசியுள்ளார்.

இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே... - அழகிப்போட்டியில் இருந்து வெளியேறிய பெண் குற்றச்சாட்டு IBC Tamilnadu
