மீண்டும் ஹீரோவாக நடிக்க வரும் ராமராஜன்.. அதுவும் எப்படிப்பட்ட கதைக்களத்தில் தெரியுமா
நடிகர் ராமராஜன்
தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் பல ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் ராமராஜன். நடிப்பது மட்டுமல்லாமல் மண்ணுக்கேத்த பொண்ணு என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குனராகவும் அறிமுகமானார்.

1989ஆம் ஆண்டு ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன். இப்படம் கிட்டத்தட்ட ஒரு ஆண்டிற்கும் மேல் திரையரங்கில் ஓடி பல சாதனைகள் படைத்தது.
மீண்டும் நடிக்க வருகிறார் ராமராஜன்
கடந்த பல ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வரும் நடிகர் ராமராஜன் தற்போது மீண்டும் திரையுலகில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கிறார்.

ஆம், தம்பிக்கோட்டை படத்தை இயக்கிய அம்மு ரமேஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரில்லர் கதைக்களம் கொண்ட படத்தில் தான், ராமராஜன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan