ராமராஜன் - நளினி விவாகரத்துக்கு இந்த நடிகை தான் காரணமா
ராமராஜன் விவாகரத்து
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்தவர் ராமராஜன். கரகாட்டக்காரன் உள்ளிட்ட அவரது சில படங்கள் தற்போதும் பேசப்படும் படங்களாகவே இருக்கின்றன.
ராமராஜன் நடிகை நளினியை காதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்கள் 2000ல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அந்த விவாகரத்துக்கு ராமராஜன் உடன் சீறி வரும் காளை என்ற படத்தில் அவருடன் நடித்த அபிதா தான் காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.
அபிதா விளக்கம்
அபிதா விக்ரமின் சேது படத்தில் நடித்து பிரபலம் ஆனவர். அவர் அதற்கு பிறகு நடித்த படங்கள் எதுவும் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதனால் தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார் அவர்.
ராமராஜன் - நளினி விவாகரத்துக்கு நான் காரணமில்லை என அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். நான் ஷூட்டிங் முடிந்தால் உடனே என் அறைக்கு சென்றுவிடுவேன், நளினியை நேரில் கூட பார்த்தது இல்லை. என்னை பற்றி இப்படி வதந்தி பரப்பியது வருத்தமாக இருக்கிறது என அவர் கூறி இருக்கிறார்.
சென்னையை தொடர்ந்து வெளிநாட்டில் கோடிக்கணக்கில் வீடு வாங்கியுள்ள விஜய்! அசர வைக்கும் விலை