நடிகர் ராமராஜன் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் ஒரேஒரு சோதனை- சோகத்தை வெளிப்படுத்திய பிரபலம்
நடிகர் ராமராஜன்
ரஜினி, கமல்ஹாசன் போன்றோர் படு மாஸாக நடித்துக்கொண்டு வந்த காலத்தில் ஆடை, அழகு எல்லாம் நடிப்புக்கு தேவையே இல்லை என ஒரு தனி வழியில் படங்கள் நடித்து மக்கள் மனதை வென்றவர் ராமராஜன்.
கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ராமராஜன் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.
பீக்கில் இருந்த போது நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்தார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
நடிகரின் வருத்தம்
என்னுடைய மகனுக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறார், அவர் என்னை மாடு தாத்தா என்று தான் கூப்பிடுவார். வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள், வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் என்னுடைய மகளுக்கு திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் ஒரு குழந்தை இல்லை என்பது எனக்கு எப்போதும் ஒரு வருத்தமாகவே உள்ளது.
அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்து விட்டால் என்னுடைய மனசு ரொம்பவே சந்தோஷம் அடைந்து விடும் என வருத்தமாக பேசியுள்ளார்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
