பிரபலங்கள் ராமராஜன்-நளினி தம்பதியின் மகளை பார்த்துள்ளீர்களா?- இதோ லேட்டஸ்ட் க்ளிக்
ராமராஜன்
கரகாட்டக்காரன் 1989ல் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் படம். இப்படத்தின் மூலம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட நடிகராக இருந்தார் ராமராஜன்.
1977ம் ஆண்டு மீனாட்சி குங்குமம் என்ற படம் மூலம் நடிப்பை தொடங்கியுள்ளார். அதன்பிறகு தொடர்ந்து ஒரு 50 படங்களுக்கு மேல் நடித்துவந்த அவர் இடையில் இயக்குனராகவும் சில படங்களை இயக்கினார்.
படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலிலும் ஈடுபட்டு தனது முழு ஈடுபாட்டை காட்டி வந்தார்.
திருமணம்
இவர் 1987ம் ஆண்டு நடிகை நளினியை திருமணம் செய்தார். 13 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.
அண்மையில் நடிகை நளினியின் பிறந்தநாள் வந்துள்ளது, அவரது மகள் தனது அம்மாவிற்கு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,
அருள்நிதியின் டைரி திரைப்படம் முதல் நாளில் செய்த நல்ல வசூல்- எவ்வளவு தெரியுமா?