முன்னணி ஹீரோ படத்தில் நடிக்க உடல் எடையை குறைத்த ரம்யா கிருஷ்ணன்.. இயக்குநர் கூறிய தகவல்

By Kathick Apr 06, 2026 05:30 AM GMT
Report

ரம்யா கிருஷ்ணன்

திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக பயணித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். கதாநாயகி, வில்லி, அம்மா என எந்த விதமான கதாபாத்திரம் தனக்குக் கிடைத்தாலும் அதில் சிறப்பாக நடிப்பார்.

முன்னணி ஹீரோ படத்தில் நடிக்க உடல் எடையை குறைத்த ரம்யா கிருஷ்ணன்.. இயக்குநர் கூறிய தகவல் | Ramya Krishnan Had Weight Loss For This Hero Movie

படையப்பா, பாகுபலி போன்ற படங்கள் இவருடைய நடிப்பில் வெளிவந்து உலகளவில் மாபெரும் வெற்றிபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு வெளிவரவுள்ளது.

முன்னணி ஹீரோ படத்தில் நடிக்க உடல் எடையை குறைத்த ரம்யா கிருஷ்ணன்.. இயக்குநர் கூறிய தகவல் | Ramya Krishnan Had Weight Loss For This Hero Movie

ரம்யா கிருஷ்ணன் நடித்த தரமான திரைப்படங்களில் ஒன்று பஞ்சதந்திரம். இப்படத்தை இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் இயக்க கமல் ஹாசன், ஜெயராம், சிம்ரன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் மேகி என்கிற கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.

கே. எஸ். ரவிக்குமார் பேட்டி

இந்த நிலையில், இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரம்யா கிருஷ்ணன் தனது உடல் எடையை குறைக்க எடுத்துக்கொண்ட முயற்சி குறித்து படத்தின் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

முன்னணி ஹீரோ படத்தில் நடிக்க உடல் எடையை குறைத்த ரம்யா கிருஷ்ணன்.. இயக்குநர் கூறிய தகவல் | Ramya Krishnan Had Weight Loss For This Hero Movie

"பஞ்சதந்திரம் படத்தில் மேகி கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பத்தில் ரம்யா கிருஷ்ணன், நக்மா, ரம்பா என பலரும் லிஸ்டில் இருந்தாங்க. இந்த கதாபாத்திரத்திற்கு தான் நடிக்க முடியும் என்று கூறினேன். ரம்யா கிருஷ்ணன் ஒரு மாதம் டைம் கேட்டார். பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்து மேகி ரோலில் நடிச்சார்"

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US