ராமாயணா படத்தில் நடிக்க ரன்பீர் கபூர், சாய் பல்லவி வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Jul 08, 2025 07:00 AM GMT
Report

ராமாயணா 

புகழ்பெற்ற சரித்திர கதைகளில் ஒன்று ராமாயணம். இதை வைத்து இதுவரை பல படங்கள் வெளிவந்துவிட்டன. எஸ்.எஸ். ராஜமௌலிக்கு கூட ராமாயணம் மற்றும் மகாபாரதம் கதைகளை படமாக எடுக்கவேண்டும் என்பது கனவாக உள்ளது.

பிரபாஸ் நடிப்பில் கடந்த 2023ல் வெளிவந்த ஆதிபுருஷ் திரைப்படம் எப்படிப்பட்ட வரவேற்பை பெற்றது என்பதை நாம் அறிவோம். இதை தொடர்ந்து தற்போது மீண்டும் ராமாயணம் கதையை மையமாக வைத்து பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம்தான் ராமாயணா. இப்படத்தை இயக்குநர் நிதேஷ் டிவாரி இயக்கி வருகிறார்.

ராமாயணா படத்தில் நடிக்க ரன்பீர் கபூர், சாய் பல்லவி வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Ranbir Kapoor And Sai Pallavi Salary For Ramayana

ரன்பீர் கபூர் ராமராக நடிக்கிறார், சீதாவாக சாய் பல்லவி நடிக்க ராவணனாக யாஷ் நடிக்கிறார். உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் Hans Zimmer ஆகிய இருவரும் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர். ரூ. 1600 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

கடந்த வாரம் இப்படத்தின் First லுக் வீடியோ வெளிவந்தது. அந்த வீடியோ அமைக்கப்பட்டிருந்த விதம் அனைவரையும் கவர்ந்துவிட்டது. இதன்மூலம் ராமாயணா படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் 2026ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருகிறது. இரண்டாம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ராமாயணா படத்தில் நடிக்க ரன்பீர் கபூர், சாய் பல்லவி வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Ranbir Kapoor And Sai Pallavi Salary For Ramayana

பரதநாட்டியத்தில் அசத்தும் இந்த நடிகை யார் தெரியுமா.. இளைஞர்களின் கனவு கன்னி!

பரதநாட்டியத்தில் அசத்தும் இந்த நடிகை யார் தெரியுமா.. இளைஞர்களின் கனவு கன்னி!

ரன்பீர் கபூர், சாய் பல்லவி சம்பளம்

இந்த நிலையில், ராமர் - சீதா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரன்பீர் கபூர் - சாய் பல்லவி, இப்படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் ராமராக நடிக்க நடிகர் ரன்பீர் கபூர் ரூ. 150 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.

மேலும் சீதாவாக நடிக்கும் சாய் பல்லவி ரூ. 12 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவை அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை, பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 

ராமாயணா படத்தில் நடிக்க ரன்பீர் கபூர், சாய் பல்லவி வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Ranbir Kapoor And Sai Pallavi Salary For Ramayana

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US