German திரைப்படம் குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் சொன்ன அப்டேட், இப்படி தான் கதை இருக்கும்!
பா. ரஞ்சித்
தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநராக திகழ்ந்து பா. ரஞ்சித் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் சியான் விக்ரம் 61-வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் கே. ஜி. எப் பாணியில் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இயக்குநர் ரஞ்சித் அவரின் கனவு திரைப்படமாக German திரைப்படம் இருக்கும் என்றும், அப்படத்தின் கதையை நடிகர் சூர்யாவிடம் சொன்னதாகவும் அப்படம் பின் வரும் காலங்களில் உருவாகும் என தெரிவித்து இருந்தார்.

German
இதனால் சூர்யாவின் ரசிகர்கள் German திரைப்படம் குறித்த போஸ்டர்களை வேறொரு கதையுடன் அவர்களே வடிவமைத்து இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதனிடையே இது குறித்து பேசியுள்ள ரஞ்சித் German படம் குறித்து பரவி வரும் கதை உண்மையில்லை, அது எதிர்காலம் சார்ந்த படமாக இருக்கும், சூர்யாவிடம் அந்த கதையை சொல்லிவிட்டேன், இந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல அதில் சில மாற்றங்கள் செய்ய இருக்கிறேன் அது ஒரு மிக பெரிய படமாக இருக்கும் என பேசியுள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் செய்த பிரபல சீரியல் நடிகை
6,000mAh பற்றரி திறன்.,Lava Bold N4 Pro இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? News Lankasri
34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ் News Lankasri
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri