150 கோடியில் எடுக்கப்பட்ட விளம்பர படத்தின் புரோமோஷன்.. நடிகை ஸ்ரீலீலாவை புகழ்ந்து தள்ளிய ரன்வீர் சிங்..
ஏஜென்ட் சிங் அட்டக்ஸ்
பிரம்மாண்ட இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள விளம்பர படம் 'ஏஜென்ட் சிங் அட்டக்ஸ்'. ரன்வீர் சிங், ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் ஆகியோர் ஒன்றிணைந்து நடித்துள்ள இந்த விளம்பரத்திற்கு Youtube-ல் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த விளம்பரத்தை ரூ. 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில், 'ஏஜென்ட் சிங் அட்டக்ஸ்' விளம்பரத்திற்காக ப்ரோமோஷன் நடைபெற்றது. இந்த புரோமோஷனில் நடிகர் ரன்வீர் சிங் நடிகை ஸ்ரீலீலாவை புகழ்ந்து பேசினார்.
புகழ்ந்து தள்ளிய ரன்வீர்
அவர் பேசுகையில் "ஸ்ரீலீலா, தி ரியல் நேஷனல் க்ரஷ். அவருடைய முதல் ஹிந்தி படத்திற்காக காத்திருக்கிறேன். பாலிவுட் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான அனுராக் பாசுவுடன் பணிபுரிந்து வருகிறார். அப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என கூறினார்.

மேலும், " ஸ்ரீலீலா மிகவும் அழகானவர், திறமையானவர், அது அனைவருக்கும் தெரியும். அவர் இன்னும் சில ஆண்டுகளில் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பார் என நம்புகிறேன்" என அவரை புகழ்ந்து பேசினார்.
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri