அவருடன் இணைந்தது பெருமை.. நடிகை ராஷ்மிகா மந்தனா உருக்கம்
ராஷ்மிகா மந்தனா
நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட திரையுலகம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இதன்பின் தெலுங்கில் எண்ட்ரி கொடுத்த இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. பாலிவுட் திரையுலகிலும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.
இவரது நடிப்பில் கடைசியாக ஹிந்தியில் சாவா என்ற படம் வெளியாகி இருந்தது. இதில் நடிகை ராஷ்மிகாவின் நடிப்பு ரசிகர்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

ராஷ்மிகா மந்தனா உருக்கம்
தற்போது சல்மான் கான் ஜோடியாக சிக்கந்தர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்தது. இந்நிலையில், சல்மான் கான் ஜோடியாக நடிப்பது குறித்து ராஷ்மிகா சொன்ன பதில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சல்மான் கான் அவருடன் இணைந்து படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
Super Singer 11: சூப்பர்சிங்கரில் ஐந்தாவது ஃபைனலிஸ்டாக சென்றது யார்? அரங்கமே கண்ணீரில் ஆழ்ந்த தருணம் Manithan
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்; மக்களுக்கு அனுமதி இல்லை - நீதிமன்றம் உத்தரவு IBC Tamilnadu