தொழிலதிபரான வாரிசு படத்தின் கதாநாயகி ! முதலீடு காரணமாக அவருக்கு இவ்வளவு வருமானமா?
தொழிலதிபரான ராஷ்மிகா
தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
மேலும் தமிழில் சுல்தான் திரைப்படத்தின் முலம் அறிமுகமான ராஷ்மிகா தனது இரண்டாவது படத்திலே தளபதி விஜய்க்கு ஜோடியாகியுள்ளார்.
அதன்படி தற்போது தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா தான் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் ராஷ்மிகா வேகன் பியூட்டி மற்றும் பெர்சனல் கேரான ப்ளம் என அழகு சாதனப் பொருட்கள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளாராம், மேலும் அந்த பிராண்டின் ambassador-ஆகவும் அவர் பொறுப்பேற்றுள்ளாராம்.
மேலும் இந்த பிராண்ட் அடுத்த 12 மாதங்களில் ராஷ்மிகாவின் ரசிகர்கள் பட்டாளத்துடன் அவர்களின் வருடாந்திர வருவாய் இரட்டிப்பாக்கும் நோக்கத்தில் இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

கமலின் அடுத்த திரைப்படத்திலும் விக்ரம் படத்தின் முக்கிய நடிகர் ! அடுத்த பிளாக் பஸ்டர்?
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu