கரண் ஜோகரால் ஏமாற்றம் அடைந்த நடிகை ராஷ்மிகா.. ராசி இல்லை என எழுந்த சர்ச்சை
ராஷ்மிகா மந்தனா
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.

ஆம், அமிதாப் பச்சனுடன் 'குட்பை', சித்தார்த் மல்ஹோத்ராவுடன் 'மிஷன் மஜ்னு' ஆகிய படங்களில் ராஷ்மிகா நடித்துள்ளார். இந்த இரு படங்களும் வெளியாக காத்திருக்கிறது. மேலும், தற்போது ரன்வீர் சிங்குடன் இணைந்து 'அனிமல்' எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக டைகர் ஷெராஃப்புடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவிருந்த ராஷ்மிகா. இப்படத்தை கரண் ஜோகர் தயாரிப்பதாக இருந்தது.
ஏமாற்றம் அடைந்த ராஷ்மிகா
இப்படத்தின் அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நடிகை ராஷ்மிகாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
தொடர் ஹிந்தி படங்களின் தோல்வி காரணமாக இப்படத்தை கரண் ஜோகர் ட்ராப் செய்துவிட்டாராம். பட்ஜெட் அதிகம் என்ற ஒரே காரணத்தினால் தான் இப்படத்தை நிறுத்திவிட்டாராம் கரண் ஜோகர்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட பல பாலிவுட் இணையதளங்கள் ராஷ்மிகாவிற்கு ராசி இல்லை என்பது போல் எழுதி வருகிறார்கள்.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri